சில நாட்களுக்கு முன்னர் அஜித் வெளியிட்டதாக அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அஜித்தின் லெட்டர்பேடில், அஜித் கையெழுத்துடன் இருந்த அந்த அறிக்கையில் தான் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை போலியானது என அஜித் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து போலியான அறிக்கை தயார் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அஜித் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸார் அந்த அறிக்கை 2019 ஜனவரியில் அஜித் வெளியிட்ட அறிக்கையில் இருந்த கையெழுத்தை காப்பி செய்து தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அந்த போலி அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் இலங்கை தமிழர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் என்பதால், இதை செய்தது இலங்கை வாழ் தமிழராக இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.