சன் டிவி சீரியலில் அஜித் பட நடிகை !

புதன், 16 ஜூன் 2021 (22:59 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரது பட நடிகை ஒருவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் அஜித் நடித்த 3 கதாப்பாத்திரங்களில் நடித்து வெற்றி பெற்ற படம் வரலாறு. இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்தவர் கனிகா. இவர் இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான பைவ் ஸ்டார் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். பின்னர் சேரனும் ஆட்டோகிராஃப் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் தற்போது ஆக்டிவாக இருக்கும் கனிகாவுக்கு சன் தொலைக்காட்சியில் கோலங்கள் தொடரின் மூலம் பிரபலம் அடைந்த திருச்செல்வம் சன் தொலைக்காட்சியில் ஒரு தொடர் இயக்கவுள்ளார். இதில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை கனிகா நடிக்கவுள்ளார்.

இவர் ஏற்கனவே தங்கவேட்டை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்