தன்னுடைய குட் பேட் அக்லி படம் அடைந்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அஜித்குமார் கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் ஆர்வமாகக் கலந்துகொண்டு வருகிறார். இனிமேல் வருடத்துக்கு ஒரு படம், மீத நேரத்தில் கார் ரேஸ் பந்தயங்கள் என திட்டம் வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்த படத்துக்கான முன்தயாரிப்புப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஆகியோர் சந்தித்துப் பேசியதாக சொல்லப்படுகிறது. மார்கோ படத்தின் இயக்குனர் ஹனீஃப் அதேனி இயக்கத்தில் அஜித்தை வைத்து ஒரு படத்தைத் தயாரிப்பது தில் ராஜுவின் திட்டமாக இருந்துள்ளது. ஆனால் இந்த படத்துக்கு அஜித்துக்கு அவர் சொன்ன சம்பளம் மிகக் குறைவாக இருந்ததால் அஜித் தரப்பு பின் வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. சமீபகாலமாக தன்னுடைய மார்க்கெட் நிலவரத்துக்கு மேலாக அஜித் சம்பளம் கேட்டுவருவதாக ஒரு தகவல் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது.