அஜித்- ஆதிக் ரவிச்சந்திரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மாற்றமா?

வெள்ளி, 24 நவம்பர் 2023 (07:39 IST)
அஜித் இப்போது தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் நடந்து வருகிறது.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் அஜர்பைஜானில் தொடங்கியுள்ளது.

இதையடுத்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அவர் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றிபெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை முதலில் கோ, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவன மான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் அஜித் 63 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்