மீண்டும் இணையும் மூவர் கூட்டணி… உறுதியானது அஜித் 61 படக்குழு?

புதன், 17 பிப்ரவரி 2021 (10:02 IST)
அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் இயக்குனர் ஹெச் வினோத்தே இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

 இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. ஆனால் அவர் தயாரிக்கும் மற்ற படங்களுக்கான வேலைகள் மட்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனால் அஜித் ரசிகர்கள் போனி கபூரிடம் வலிமை அப்டேட் கேட்டு தொல்லைக் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் மோடி வரை வலிமை அப்டேட் சென்றுவிடவே அஜித் தலையிட்டு தன் ரசிகர்களைக் கண்டித்தார். இந்நிலையில் இப்போது அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூரே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து ஹெச் வினோத்தே அந்த படத்தையும் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்