கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பூமிகா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது முதலில் விஜய் தொலைக்காட்சியில் ரிலீஸ் செய்துவிட்டு பின்னர் ஓடிடியில் ரிலீஸ் செய்யும் முடிவில் படக்குழு உள்ளதாக சொல்லப்படுகிறது.