ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி புதிதாக எழும் குற்றச்சாட்டு!

திங்கள், 20 பிப்ரவரி 2023 (15:57 IST)
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பளம் அதிகமாகக் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன  திரைப்படம் டிரைவர் ஜமுனா மற்றும் தி கிரேட் இந்தியன் கிச்சன் ஆகிய படங்கள்.

ஆனால் இந்த படங்களுமே திரையரங்குகளில் மிக மோசமான வசூலையேப் பெற்றுள்ளன. இரண்டு படங்களுமே தமிழ்நாட்டில் அந்த தயாரிப்பாளர்களிக்கு 10 லட்ச ரூபாய் அளவிலேயே பங்காக ஈட்டுக் கொடுத்துள்ளன என சொல்லப்படுகிறது. நிலைமை இப்படி இருக்க ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பளமாக ஒன்றரைக் கோடி ரூபாய் கேட்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்