தங்கள் அடுத்த பட அறிவிப்பை வெளியிடும் விஜய் பட தயாரிப்பு நிறுவனம்!

vinoth

புதன், 10 ஏப்ரல் 2024 (10:05 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ளது ஏஜிஸ் புரொடக்‌ஷன்ஸ். ஏற்கனவே விஜய்யை வைத்து பிகில் என்ற படத்தைத் தயாரித்த இந்த நிறுவனம் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “The GOAT” என்ற படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று ஏஜிஎஸ் நிறுவனம் தங்கள் அடுத்தபடமான “ஏஜிஎஸ் 26” என்ற படத்தின் அறிவிப்பை வெளியிட உள்ளது. அதில் “துப்பாக்கி, ரத்தம் இல்லாமல் , வெட்டு குத்து இல்லாம கூலா ஒரு வீடியோவோட அடுத்த படத்த அறிவிக்க போறோம்.” என தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்றிரவு 7.02 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்