கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

vinoth

வியாழன், 16 மே 2024 (08:38 IST)
விஜய் அரசியலில் இறங்கப் போவதால் தற்போது நடித்து வரும் கோட் படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என அறிவித்துள்ளார். இதனால் தற்போது அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில்  செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக ஒரு கதாபாத்திரமாக உருவாக்கப்பட உள்ளார் என செய்திகள் வெளியாகின.

படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் படத்தின் பிஸ்ன்ஸும் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸும், சேட்டிலைட் உரிமையை ஜி நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமை வியாபாரத்தில் நடந்த குளறுபடி பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி முதலில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை 150 கோடி ரூபாய் என நிர்ணயித்தார்களாம். அப்போது அமேசான் ப்ரைம் நிறுவனம் 140 கோடி ரூபாய் தந்து வாங்கிக் கொள்ள தயாராக இருந்தார்களாம். ஆனால் தயாரிப்பு நிறுவனம் இறங்கிவரவில்லை. இதற்கிடையில் ஓடிடி வியாபாரம் படுத்துவிட அமேசான் ப்ரைம் சொன்ன விலைக்கு இவர்கள் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் இந்த ஆண்டுக்கான எங்கள் பட்ஜெட் காலி எனக் கையை விரித்துள்ளனர். அதனால் பின்னர் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி 110 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இதனால் அவர்களுக்கு 30 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்