ஊருக்குள்ள கோட் சூட் போட்ட டிடெக்டிவ் யாரு..? – டிடெக்டிவ் கண்ணாயிரம் ட்ரெய்லர்!

வெள்ளி, 21 ஜனவரி 2022 (12:20 IST)
சந்தானம் நடித்து வெளியாகவுள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

தெலுங்கில் இயக்குனர் ஸ்வரூப் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி தேசிய அளவில் ஹிட் அடித்த டிடெக்டிவ் படம் ஏஜ்ண்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா. இந்த படத்தில் நவீன் பொலிசெட்டி, ஸ்ருதி சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் சமீபத்தில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

இந்நிலையில் இந்த படம் தமிழில் அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் நிலையில் படத்திற்கு ஏஜெண்ட் கண்ணாயிரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மனோஜ் பிதா இயக்கும் நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லரை காண…

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்