லோகேஷ் கனகராஜ் இயக்குவது இந்த பிரபல நடிகரின் படத்தையா? ஆச்சரிய தகவல்

திங்கள், 5 ஏப்ரல் 2021 (17:42 IST)
மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் கைதி, மாஸ்டர் என்ற ஆகிய சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பாகுபலி, பாகுபலி 2 ஆகிய திரைப்படங்கள் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஆந்திரா சென்ற போது பிரபாஸை லோகேஷ் கனகராஜ் சந்தித்து கதை கூறியதாகவும் அந்த கதை மிகவும் பிடித்து விட்டதால் இருவரும் இணைந்து பணிபுரிய முடிவு செய்துள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
கமலஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி விட்டு பிரபாஸ் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் நடிக்கும் அடுத்த படமான ‘தளபதி 66’ படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் லோகேஷ் பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்