சினிமாவில் இருந்து விலகவும் தயார்: கமல்ஹாசன் அறிவிப்பு

திங்கள், 5 ஏப்ரல் 2021 (06:43 IST)
என்னுடைய அரசியல் வாழ்விற்கு சினிமா இடைஞ்சலாக இருந்தால் சினிமாவை விட்டு விலக தயார் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார் 
 
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரசாரம் முடிவடைவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் பேட்டியளித்தார். அவருடன் சுஹாஷினி மற்றும் ராதிகா உடனிருந்தனர். அவர் கூறியதாவது:
 
நான் அரசியலுக்கு வரக்கூடாது என்று பல மிரட்டல்கள் வந்தன. ஆனால் அந்த மிரட்டலுக்கு இங்கு இடமே கிடையாது. என்னுடைய எஞ்சிய் நாளை மக்களுக்காக சேவை செய்யவே நான் முடிவு செய்துவிட்டேன். சினிமா என்னுடைய தொழில், முடிந்தவரை பணம் சம்பாதித்து மற்றவர்களின் தயவில் வாழக்கூடாது என்பதற்காக படங்களில் நடித்து வருகிறேன்
 
ஆனால் அதே நேரத்தில் அரசியலுக்கு சினிமா இடைஞ்சலாக இருந்ததால் சினிமாவை விட்டு விலகி விடுவேன். தற்போது ஒப்புக் கொண்ட படங்களில் மட்டும் நடித்து விட்டு அடுத்த படங்கள் எடுப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்தேன். ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆர் எம்எல்ஏ என்ற பட்டத்துடன் பல படங்களில் நடித்தார். அதேபோல் அரசியலுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருந்தால் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்