22 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரியாகும் நடிகை சித்ரா!

செவ்வாய், 23 அக்டோபர் 2018 (12:39 IST)
1980 காலக்கட்டத்தில்  தமிழில் சேரன் பாண்டியன், சின்னவர், பொண்டாட்டி ராஜ்ஜியம் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் சித்ரா, இவர் திருமணத்திற்குப் பிறகு சினிமா துறையில் இருந்து  விலகி இருந்தார்.
 
தற்போது  22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்  'என் சங்கத்து ஆள அடிச்சவன்எவன்டா..?’ எனும் தமிழ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் நவீன் மணிகண்டன் இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
எஸ்.எச்.மீடியா டிரீம் சார்பில் சாகுல் ஹமீது தயாரிக்கும்  இப்படத்தில் சித்ராவும், டெல்லி கணேஷும் ஹீரோவின் பெற்றோர்களாக நடித்துள்ளனர். அவர்களது பிளாஷ் பேக் காதல் காட்சிகள் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் என படக்குழுவினர் தெரிவித்தனர். இவர்களுடன் ராகுல் தாத்தா, விஜய் டிவி ராமர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்