போடா போடி, தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வரலட்சுமி. நடிகர் விஷாலுக்கும், இவருக்கும் காதல் இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில், அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவந்தன. சில மாதங்களுக்கு முன்பு சேவ் சக்தி என்ற பெயரில் பெண்களுக்கான ஒரு அமைப்பையும் வரலட்சுமி தொடங்கினார்.
இந்நிலையில், அவர் கடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில், அவரின் செய்திகள் பரவியது. அதோடு, அவரை ஒரு கட்டிலில் கட்டி வைத்திருப்பது போல் புகைப்படமும் வெளியாகியது. #varalaxmiGotKidnapped என்கிற ஹாஸ் டேக்கும் டிவிட்டரில் பரவத் தொடங்கியது. இதனால், சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் ஒரு புதிய படத்திற்கான புரமோஷனுக்காகத்தான் இப்படி செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அதுபற்றிய அறிவிப்பை படக்குழுவினர் இன்று மாலை அறிவிக்க உள்ளனர். ஆனால், அதற்கு முன் ஒரு விளம்பரத்திற்காகவே இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.