சேலையில் க்யூட் போஸ் கொடுத்த வாணி போஜன்… லேட்டஸ்ட் ஆல்பம்!
ஞாயிறு, 30 ஜூலை 2023 (11:48 IST)
சின்னத்திரை நயன்தாரா என்று சீரியல் ரசிகர்களால் அழைக்கப்பட்டு பெரும் பிரபலமடைந்தவர் நடிகை வாணி போஜன். ஆரம்பத்தில் விமான பணிப் பெண்ணாக இருந்து பின்னர் மாடலிங் திரையில் நுழைந்தார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில் தான் சீரியல் நடிகையானார்.
சன் டிவியில் ஒளிபரப்பான "தெய்வமகள் " சீரியலில் நடித்து குறுகிய காலத்தில் குடும்ப ரசிகர்களிடையே பேமஸ் ஆகினார். அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைய அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது. அசோக் செல்வன் நடித்த ஓ மை கடவுளே படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு மகான், மிரள், லவ் என ஏகப்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் அவர் இப்போது தன்னுடைய அழகான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட அவை இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றன.