லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ராங்கி திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி கடந்த சில ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த நிலையில் பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பிறகு திரிஷாவுக்குக் கிடைத்த ஆதரவால் டிசம்பரில் ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்த படத்தில் திரிஷா பத்திரிக்கையாளராக நடித்திருந்தார். திரையரங்கில் இந்த படம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.