தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் இப்போது காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்க உள்ளார். அந்த படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவும் மலையாள நடிகர் தேவ் மோகனும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்த படம் நவம்பர் மாதமே ரிலீஸ் ஆக இருந்த நிலையில் பின்னர் பிப்ரவரி 17 ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது சகுந்தலம் படத்தைப் பார்த்துள்ள சமந்தா, ”ஒருவழியாக இன்று சகுந்தலம் படத்தைப் பார்த்தேன். என்ன ஒரு அழகான படம். குடும்ப பட ரசிகர்களை உணர்ச்சிகளால் ஈர்த்து செல்லும் ஒரு படம்” எனக் கூறியுள்ளார்.