சமந்தாவ பத்தி ஒரே வார்த்தைல சொல்லணும்னா… கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில்!

செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (08:01 IST)
காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்லை எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவான புராண திரைப்படத்தில் சமந்தா, சகுந்தலையாக நடித்துள்ளார். இந்த படத்தை குணசேகர் இயக்கி இருந்தார். கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் சமந்தாவின் நெருங்கிய தோழியும், சக நடிகையுமான கீர்த்தி சுரேஷ் சமந்தாவை ‘வலிமையான இதயம் கொண்டவர்’ என பாராட்டியுள்ளார். ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் சமந்தாவைப் பற்றி சொல்லுங்கள் எனக் கேட்ட போது “நான் வியந்து பார்க்கும் ஆளுமைகளில் ஒருவர்.  நான் கடந்து வந்த நபர்களில் மிகவும் வலிமையானவர். எளிமையாக சொல்வதென்றால், தடுத்து நிறுத்த முடியாதவர்” எனப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்