சமந்தா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள தி ஃபேமிலி மேன் தொடர் தமிழ் இனத்திற்கு போராடிய இயக்கத்தின் வரலாற்றை கொச்சைப்படுத்துவதாக உள்ளதாக சேரன், சீமான் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இத்தொடருக்கு வரவேற்புக் கிடைத்துள்ளதால் சமந்தா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்த தி ஃபேமிலிமேன் 2 என்ற விரைவில் அமேசான் பிரைமில் நாளை ஒளிபரப்பாகும் எனக் கூறப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் ரிலீஸாகியுள்ளது.
இத்தொடரில் நடித்தது குறித்து சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எனக்கு வந்துள்ள விமர்சனங்கள், பாராட்டுகள் அனைத்தும் என் இதயத்திற்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஒரு நீண்ட பதிவிட்டுள்ளார்.