தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சனி, 5 ஜூன் 2021 (20:27 IST)
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சிபிஎஸ் இ., ஐசிஎஸ் இ ஆகிய பள்ளி அமைப்புகளின் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் நடக்குமா ரத்து செய்யப்படுமா எனக் கேள்வி எழுந்தது.

சமீபத்தில் பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் சுமார் 60%  பேர் பொதுத்தேர்வு நடத்துவதுவதற்கு ஆதரவு  தெரிவித்தனர். அதேபோல் 12 ஆம் வகுப்பு தேர்தல் நடத்த பெரும்பாலான கட்சிகள் ஆதரவு  தெரிவித்துள்ளன. சட்டமன்ற பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்குப் பிரகு மருத்துவ வல்லுநர்கள், உளவியல் நிபுணர்களுடன் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை செயதார். இன்று இதற்காக அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் அவர் சமர்ப்பித்தார்.

இதனால் , எனவே, . 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு செப்டம்பரில் பொதுத்தேர்வு  நடத்தப்படுவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியானது.

தற்போது  தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 
ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளஸ்2 மாணவர்களுக்கு மதிப்பெண் எப்படி வழங்குவது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும்.

இந்தக் குழு அளிக்கவுள்ள அறிக்கையின் அடிப்படையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இறுதித் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.   இந்த மதிப்பெண்களைக்கொண்டு மட்டுமே தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும்.  இந்த சூழ்நிலையில் நீட் நடத்துவது ஏற்றதாக இருக்காது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

மேலும், மாணவர்களுக்கு எந்தவிதத்திலும் உயர் கல்வி சேர்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்யும்.  மாணவர்களின் நலனை அடிப்படையாகத்தான் பிளஸ் 2 தேர்வு ரத்து  என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்