உள்ளாடைகளை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய சமந்தா..

வியாழன், 1 ஜூன் 2017 (15:44 IST)
நடிகை சமந்தா தான் உடுத்தும் உள்ளாடைகளை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


 

 
நடிகை சமந்தா தனது காதலரான நடிகர் நாக சைதன்யாவை விரைவில் திருமணம் செய்யவுள்ளார். தற்போது, விஜய்யுடன் ஒரு படம், விஷாலுடன் இரும்புத்திரை, விஜய் சேதுபதியுடன் அநீதி கதைகள், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் என தமிழில் சில படங்களை கமிட் ஆகியுள்ளார்.  


 

 
இந்நிலையில், சமந்தா பிஸியாக இருக்கும் போது நேரம் கிடைக்கும் போது வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். அதுபோல சில நாட்களுக்கு முன்பு தான் விடுமுறைக்கு செல்வதாக  புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அந்த புகைபடத்தில் அவரது பிகினி உடை இருந்ததால் பலர் அவரை விமர்சித்து கருத்து பதிவிட்டனர். 
 
இதனால் கோபமான சமந்தா, ஒரு பெண் என்ன உடை அணிகிறாள் என்பதை பொறுத்துதான் நீங்கள் ஒருத்தரை மதிப்பிடுவீர்களா? உங்களது புத்தியை நினைத்து வெட்கப்படுங்கள் என பதிலளித்திருந்தார்.
 
இந்நிலையில், தான் உடுத்தும் உள்ளாடைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலர், நல்ல குடும்பத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் இது தேவையா? என பலரும் அவரை ஏகத்துக்கும் திட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்