வெள்ளை புடவையில் வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் புகைப்படங்கள்!

வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (08:09 IST)
நடிகை நயன்தாரா வருடப்பிறப்பை கொண்டாடுவதற்காக தனது காதலர் விக்னேஷ் சிவனோடு கேரளாவிற்கு சென்றிருந்தார்.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் வசூலில் சக்கை போடு போட்டு வருகின்றன. இந்நிலையில் அவரது காதலரோடு சேர்ந்து இப்போது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னதாக அவர் புதுவருடப் பிறப்பை கொண்டாடுவதற்காக கேரளாவுக்கு தனது காதலர் விக்னேஷ் சிவனோடு சென்றிருந்தார். இந்நிலையில் பாரம்பரிய கேரள வெள்ளை சேலையில் இருக்கும் அவரது புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்