விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் மகேஷ் பாபுவின் மனைவி! எந்த படத்தில் தெரியுமா?

சனி, 21 ஆகஸ்ட் 2021 (16:29 IST)
திருமலை படத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக முதலில் நம்ரதா நடிப்பதாக இருந்ததாம்.

விஜய்யை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றிய திரைப்படம் என்றால் அது திருமலைதான். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க தேர்வானது தெலுங்கு நடிகை நம்ரதாவாம். அவர் வேறு யாருமில்லை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மனைவிதான்.

ஆனால் சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து வெளியேறவே அவருக்கு பதில் ஜோதிகா நடிக்க வைக்கப்பட்டார். இந்நிலையில் திருமலை படத்தில் நம்ரதா நடித்துள்ள காட்சிகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்