1980 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா என்பதும் அவரது படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட மீனாவுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் விஜய் நடித்த தெறி உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மீனா சினிமாவில் நடிக்க தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அதைக் கொண்டாடும் விதமாக மீனா 40 என்ற நிகழ்ச்சியை அவரின் திரையுலக நண்பர்கள் நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் அழைக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.