மீண்டும் இணையும் ஆர்யா- லிங்குசாமி கூட்டணி! ஹிட் படத்தின் பார்ட் 2 வா?

புதன், 1 பிப்ரவரி 2023 (14:56 IST)
இயக்குனர் லிங்குசாமி அஞ்சான் படத்தின் தோல்விக்குப் பிறகு அடுத்த ஹிட் படத்தைக் கொடுக்க போராடி வருகிறார்.

சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன் இசையமைக்க என கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் கூட்டணியுடன் உருவாகி 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸானது அஞ்சான் திரைப்படம். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவான திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

அதன் பின்னர் லிங்குசாமிக்கு தொடர்ந்து தோல்விகளாக அமைந்து, சில ஆண்டுகளாக எந்தப்படமும் இயக்காமல் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் இயக்கிய வாரியர் திரைப்படமும் தோல்விப் படமாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது ஆர்யா நடிப்பில் ஒரு படத்தை தொடங்க உள்ளார். இந்த படம்  கார்த்தி- லிங்குசாமி கூட்டணியில் உருவான பையா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்