சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, தளபதி விஜய் நடித்த மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன் ஆக்சன் படப்பிடிப்பின்போது காயமடைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்
தனுஷ் நடித்த மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள மாளவிகா மோகனன் தற்போது ஹிந்தியில் யாத்ரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் ஒரு அதிரடி ஆக்ஷன் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பதும் டூப் இல்லாமல் சண்டை காட்சிகளிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஆக்சன் காட்சியின் படப்பிடிப்பின்போது அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியபோது நீங்கள் ஒரு ஆக்ஷன் படப்பிடிப்பின்போது நடிக்கும்போது பெரிய காயங்கள் கூட சிறிய காயங்கள் தோன்றும் அளவுக்கு உணர்வீர்கள் என்று தெரிவித்துள்ளார்