கணவருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட பாவனா!

சனி, 23 ஜனவரி 2021 (16:14 IST)
மலையாள நடிகை பாவனா கணவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

முன்னணி மலையாள மற்றும் தமிழ் நடிகையான பாவனா சில ஆண்டுகளுக்கு முன்னர், படப்பிடிப்பை முடித்துவிட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்று 2 மணி நேரத்திற்கும் மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர் திலிப் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து பாவனா திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் கணவருடன் நெருக்கமாக ரொமாண்டிக்காக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்