இங்கிலாந்து தலைநகரான லண்டனில் கடந்த சனிக்கிழமை காலை 7 மணியளவில் ஒரு இளைஞர் சிறுமி ஒருவரை கட்டாயப்படுத்தி அழைத்து செல்வது போல தோன்ற அங்கிருந்த பெண் ஒருவர் சந்தேகப்பட்டு அவரை வீடியோ எடுத்துள்ளார். மேலும் அருகே சென்று அந்த இளைஞனிடம் நீங்கள் யார் குழந்தை யாருடையது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த இளைஞனோ எனது உறவினரின் குழந்தைதான் என சொல்ல சந்தேகமடைந்த பெண் குழந்தையிடம் விசாரித்துள்ளார்.
அதனால் பயந்த இளைஞர் சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். அதன் பிறகு சிறுமி அழுதுகொண்டே தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண் வீடியோவை போலிஸாரிடம் ஒப்படைக்க போலிஸார் அதிலிருந்த புகைப்படத்தை வெளியிட்டு இப்போது அந்த இளைஞரைக் கைது செய்துள்ளனர். விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் கேடியன் நெல்சன் எனக் கண்டறியப்பட்டுள்ளது.