நடிகை அசின் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே இந்தியில் உருவான கஜினி படத்தின் ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதில் நடித்து பாலிவுட்டிலேயே முகாமிட்டார். ஸ்ரீதேவி போல ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
ஆனால் இப்போது மீண்டும் இன்ஸ்டாகிராமில் தனது கணவரோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “எங்கள் விடுமுறை நாளில் அருகருகே அமர்ந்து எங்கள் காலை உணவை உண்டுகொண்டே கற்பனையான் அடிப்படை உண்மையற்ற செய்தியை படித்துக் கொண்டிருக்கிறோம். விடுமுறை நாளில் இதைப் படித்ததன் மூலம் அற்புதமான 5 நிமிடத்தை இழந்திருக்கிறோம். உங்கள் நாள் சிறப்பாக அமையட்டும்” எனக் கூறியுள்ளார்.