குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் விஜய்.? ஷோபா சந்திரசேகர் பகிர்ந்த புகைப்படம் வைரல்

சனி, 24 ஜூன் 2023 (13:38 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், மாஸ்டர் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  ‘லியோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடித்துள இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22 ஆம் தேதி, அனிருத் இசையில், விஷ்ணு எடவன் வரிகளில், லியோ படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடி’ என்ற பாடல் வெளியானது.

இப்பாடல் டிரெண்டிங்கில் நம்பர் 1 ல் உள்ளது. இந்த நிலையில், பிரபல பாடகியும்,  விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் தன் டுவிட்டர் பக்கத்தில், குடும்பம் என்ற கேப்ஷனில், நடிகர் விஜய் பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். இது வைரலாகி வருகிறது.

ஆனால், இப்புகைப்படம், விஜய்,அவரது மனைவி சங்கீதா, இவர்களின் பிள்ளைகள் இருவர், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் ஆகிய எல்லோரும் தனித்தனியாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒன்றாக இருப்பது போன்று எடிட் செய்து இருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.

Family ❤ @actorvijay pic.twitter.com/KTXWEnrbio

— Shoba (@ShobaSAC) June 23, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்