கூறு போட்டு கொல்றியே ஆண்ட்ரியா - வெறித்தனமா ரசிக்கும் நெட்டிசன்ஸ்!

புதன், 9 ஜூன் 2021 (16:00 IST)
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
 
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஸ்லீவ்லெஸ் உடையணிந்து ரொமான்டிக் பார்வையால் கொத்தி இழுத்துவிட்டார். இந்த புகைப்படத்தை நெட்டிசன்ஸ் வெறிக்க வெறிக்க ரசித்து லைக்ஸ் குவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்