மதராசப் பட்டணம் படம் மூலம் தமிழில் அறிமுகமான எமி ஜாக்சன் தொடர்ந்து தங்க மகன், ஐ, எந்திரன் 2 ஆகிய படங்களிலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்தார். அதன் பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஆண்ட்ரியாஸ் என்ற மகன் உள்ளார். மகன் பிறந்த பின்னர் எமி, தன்னுடைய காதலரை பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது அதற்கு ஏமி ஜாக்சன் கோபமாக பதிலளித்துள்ளார். அதில் “ ஆண் நடிகர்கள் தங்கள் தோற்றத்தைப் படத்துக்காக மாற்றினால் அதை எல்லோரும் பாராட்டுகள். அதுவே பெண் நடிகை என்றால் மட்டும் ஏன் கேலிகள் எழுகின்றன. பெண் நடிகை அவர்களின் அழகுக்கு வரைமுறையை தாண்டி தோற்றத்தை மாற்றினால் அதை விமர்சிக்க தங்களுக்கு உரிமையுண்டு என நினைக்கிறார்கள்.” எனக் கூறியுள்ளார்.