ஹோம்லி லுக் பொண்ணு... உன் கன்னம் ரெண்டும் பண்ணு - அழகில் வசீகரிக்கும் ஆத்மிகா!

வியாழன், 10 மார்ச் 2022 (16:04 IST)
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெரிதாக வாய்ப்பு கிடைத்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்க மாஸ்டர் பிளான் போட்ட ஆத்மிகா உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது சுடிதார் அணிந்து பவ்யமான அழகில் ரசிகர்கள் பலரையும் கவர்ந்திழுத்து ரசனையில் மூழ்கியுள்ளார். இந்த கியூட் போட்டோவுக்கு நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் போட்டு தள்ளியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்