சூர்யாவின் துணிச்சலான வெற்றி "எதற்கும் துணிந்தவன்" விமர்சனம்!

வியாழன், 10 மார்ச் 2022 (14:31 IST)
திரைப்படம்: எதற்கும் துணிந்தவன் 
இயக்குனர்:  பாண்டிராஜ்
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் நிறுவனம் 
நடிகர்கள்: சூர்யா, வினய் ராய் , பிரியங்கா அருள் மோகன் ,  சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி , எம். எசு. பாசுகர் 
இசை: டி. இமான்
ஒளிப்பதிவு: ஆர். ரத்னவேலு
 
படத்தின் கதை:  
 
தென்னாடு, வடநாடு ஊர்களுக்கு இடையில் இருந்தும் வரும் பகை காரணமாக வடநாட்டை சேர்ந்த செல்வாக்கு மிக்க வில்லன் வினைய் தென்னாட்டு பெண்களை கொலை செய்கிறார். இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க  கண்ணபிரான் கதாபாத்திரத்தில் சூர்யா களத்தில் இறங்கி இதன் பின்னணியில் வினைய் இருப்பதைய் அறிந்து வினைக்கு தண்டனை வாங்கி கொடுக்கிறார். 
 
கதைக்களம்: 
 
'ஜெய் பீம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்திலும் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கிறார். ஆனால், இப்படத்தின் பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள், ஆக்ரோசமாக வசனமாக பேசுவது என ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கிறது. இதில் ஹீரோயின் பிரியங்கா மோகனுக்கும்  சூர்யாவுக்கும் இடையில் உணர்வுப்பூர்வமான காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 
 
சூர்யாவின் அப்பா அம்மாவாக சத்யராஜ் மற்றும் சரண்யா பொன்வண்ணன் அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர். கனமான குரலில் மிரட்டுவது, புகைப்படிப்பது, மது அருந்துவது என வினய்க்கு வழக்கமான வில்லன் வேடம் பக்காவாக பொருந்துகிறது. வட நாட்டு வில்லனான வினய் பெண்களை வினய் கொலை செய்ய காரணம் என்ன? என்பதை வழக்கறிஞரான சூர்யா கண்டறிந்து தக்க தண்டனை வாங்கி கொடுத்தாரா என்பதே மீதிக்கதை. 
 
படத்தின் ப்ளஸ்:  
 
காமெடி, நடனம், ரொமான்ஸ், சென்டிமென்ட், சண்டை என அனைத்து சாராம்சமும் கொடுத்து சூர்யா கமெர்ஷியலில் மிரட்டியிருக்கிறார். பிரியங்கா மோகனின் வழக்கம் போன்ற வெகுளித்தனமான கதாபத்திரம் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. படத்தில் தாய், தந்தையாக  நடித்திருக்கும்  சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் பாசமான பெற்றோராக மனதை கவர்ந்துள்ளனர். ஆண்களை எப்படி வளர்க்க வேண்டும், பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லிய இயக்குனருக்கு பாராட்டுகள். 'எதற்கும் துணிந்தவன்' சூர்யாவின் துணிச்சலான வெற்றியில் ஒன்று.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்