உலக நாடுகளுக்கு 50 கோடி ஃபைசர் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல்.
கொரோனா 2வது அலை உலகம் முழுவதும் உள்ள் பல நாடுகளை கதிகலங்க செய்து வருகிறது. கொரோனா அதிகரிப்பதால் கொரோனா தடுப்பூசிகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா ஃபைசர் கொரோனா தடுப்பூசியை உலக நாடுகளுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.
இதன்படி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜி7 நாடுகளின் உச்ச மாநாட்டில் ஜோ பைடன் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக நாடுகளுக்கு 50 கோடி ஃபைசர் தடுப்பூசிகளை இலவசமாக அமெரிக்கா வழங்கக்கூடும் என தெரிகிறது.