இந்நிலையில் விஷால் இப்போது லைகா நிறுவனத்தின் சொத்துகளை முடக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் “என்னுடைய `விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சண்டக்கோழி-2 திரைப்டத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலைட் வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன், 2018-ம் ஆண்டு 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படம் வெளியிடப்பட்டது.
லைகா நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதால், நிறுவனத்தை மூடிவிட்டு தயாரிப்பாளர் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. எனவே, நான் செலுத்திய ஜி.எஸ்.டி தொகை மற்றும் அபராதத் தொகையை, வட்டியுடன் சேர்த்து 5,24,10,423 ரூபாயை திருப்பித் தருவதற்கான உத்தரவாதத்தை செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கு முடியும் வரை RBL வங்கியில் லைகா நிறுவனம் தாக்கல் செய்துள்ள சொத்துகளை முடக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை ஏற்ற நீதிபதி ஜனவரி 19 ஆம் தேதிக்கு அடுத்த கட்ட விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.