மாமன்னன் படத்தில் நடிக்க நடிகர் வடிவேலு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சனி, 1 ஜூலை 2023 (13:04 IST)
மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கியுள்ளார். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று ரிலீஸ் ஆகிறது.
 
ரிலீஸ் ஆனதில் இருந்து பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ள இந்த திரைப்படம் முதல் நாளில் பெரிய அளவில் ரசிகர்களை தியேட்டர் நோக்கி இழுத்துள்ளது. குறிப்பாக வடிவேலுவின் நடிப்பு அணைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது . இந்நிலையில் மாமன்னன் படத்தில் நடிக்க வடிவேலு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு, ரூ. 2 முதல் ரூ. 3 கோடி வரை வடிவேலு சம்பளமாக வாங்கினாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்