தமிழ் சினிமாவின் காமெடிய நடிகர்களுள் ஒருவரான சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். தனது யதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த இவர் தொடர்ந்து விஜய் அஜித் , சூர்யா போன்ற முன்னணி நாடிகளின் படங்களில் நடித்து கிடு கிடுவென உயர்ந்தார். சூரி வளர்ந்து வந்த நேரத்தில் டாப் காமெடி நடிகராக பார்க்கப்பட்ட சந்தானத்தையே கீழே இறக்கிவிட்டார்.
இந்நிலையில் தற்போது சூரி ட்விட்டரில் கருப்பன் என்கிற கம்பீரமான காளை மாடு பிடித்துக்கொண்டு ஊரடங்கு வேளையில் சாலையில் நடந்து வரும் புகைப்படங்களை வெளியிட்டு "ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் - எங்க "கருப்பன்" நடந்து போனா!! " என பெருமையோடு பதிவிட்டுள்ளார். ஒரு நடிகராக இருந்தும் கிராமத்தில் மக்களோடு மக்களாக எந்த பந்தாவுமின்றி இருக்கும் சூரியின் சிம்லிசிட்டியை அனைவரும் பாராட்டியுள்ளனர்.