வாவ்... குட்டி தேவதையுடன் ஆல்யா எடுத்த செல்ஃபி - தீயாய் பரவி வரும் போட்டோ!

திங்கள், 6 ஜூலை 2020 (16:05 IST)
பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆல்யா மானசா பல தொலைக்காட்சி சீரியல்களிலும் ஒருசில திரைப்படங்களிலும் நடித்து இருந்தாலும் அவருக்கு உலகம் முழுவதும் புகழை பெற்று தந்த தொடர் என்றால் அது ’ராஜா ராணி’ என்று சொல்லலாம். அந்த தொடரில் ’சின்னய்யா’ என்று அவர் காதல் மொழி பேசுவது அனைவரையும் கவர்ந்தது

இந்த நிலையில் ராஜா ராணி தொடரின் ஹீரோவான சஞ்சிவ் கார்த்திக்கை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஆல்யா மானசா சமீபத்தில் கர்ப்பம் ஆனார் என்பதும் அவருக்கு அழகான பெண் குழந்தை கடந்த சமீபத்தில் பிறந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஆல்யா மானசா தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை பதிவு செய்து வந்தார். பேபி ஐலா தேவதை போல் இருக்கும் இந்த போட்டோ இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்