இந்த தீம் பாடலுக்கு சங்கர் மகாதேவன் இசையமைத்து பாட, பாடலாசிரியர் யுகபாரதி வரிகள் எழுதியுள்ளார். இந்த தொடருக்கு வரவேற்பு இருந்து வரும் நிலையில், எதிர்ப்புகளும் இருந்து வருகின்றன. பலர் டிஆர்பிக்காக தொலைக்காட்சி நிறுவனம் இந்த தொடரை மிகைப்படுத்துவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்து மதம் குறித்த சர்ச்சைக்குரிய வார்த்தைகள் பாடலில் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் சிலர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.