சென்னை கோபாலபுரத்தில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: பெரும் பரபரப்பு

வியாழன், 8 டிசம்பர் 2022 (15:30 IST)
சென்னை கோபாலபுரத்தில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சென்னை கோபாலபுரம் கான்ரான் ஸ்மித் சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. நான்கு மாடிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் இரண்டாவது மாடியில் திடீரென கரும்புகை வெளியேறியது. இதனை அடுத்த சில நிமிடங்களில் தீப்பிடித்து எரிய தொடங்கியது 
 
இதுகுறித்த தகவலின்பேரில் மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்பு துறைவீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் அனைத்து அங்கிருந்த நோயாளிகளையும் ஊழியர்களையும் மீட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்