செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. த்ரில்லர் படமான இதில், நந்திதா ஸ்வேதா, ரெஜினா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ரிலீஸுக்குத் தயாராகி பல மாதங்கள் ஆகியும், பைனான்ஸ் பிரச்னையால் ரிலீஸாகாமல் தவிக்கிறது. தற்போது அஸ்வின் சரவணன் இயக்கும் ‘இறவாக்காலம்’ படத்தில் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.
அடுத்து, நெல்சன் வெங்கடேசன் இயக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். ‘ஒருநாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசனின் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், ரித்விகா ஆகியோர் நடித்திருந்தனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அடியே அழகே...’ பாடல் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.