பார்டர் ரிலீஸில் சொதப்பிய தயாரிப்பாளர்… அப்செட் ஆன அருண் விஜய்!

வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (10:19 IST)
அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பார்டர் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கி வரும் திரைப்படம் “பார்டர்”. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். குற்றம் 23 படத்தை தொடர்ந்து அருண் விஜய் – அறிவழகன் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகும் படம் இந்த “பார்டர்”. இதில் அருண் விஜய் ராணுவ வீரராக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் தயாராகி பல மாதங்கள் ஆன நிலையில் கொரோனா மற்றும் வேறு சில காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டெ உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸில் இப்போது புது சிக்கல் உருவாகியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தின் உரிமையை இரண்டு பேரிடம் விலை பேசி விற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இது தெரிந்து இப்போது இருவரும் பிரச்சனை செய்ய, இந்த விஷயம் அருண் விஜய் காதுக்கு செல்லவே அவர் அப்செட் ஆகியுள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்