ஸ்டாலின் அமைச்சரவை கில்லியாக செயல்படுகிறது: நடிகர் பிரபு பாராட்டு!

வெள்ளி, 15 அக்டோபர் 2021 (18:27 IST)
ஸ்டாலின் அமைச்சரவை கில்லியாக செயல்படுகிறது: நடிகர் பிரபு பாராட்டு!
முதலமைச்சர் முகஸ்டாலின் அமைச்சரவை கில்லியாக செயல்படுகிறது என்று நடிகர் பிரபு புகழாரம் சூட்டியுள்ளார்
 
தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று ஆறு மாத காலம் ஆகியுள்ள நிலையில் இந்த காலகட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதும் மக்கள் அவரது ஆட்சியை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நடிகர் பிரபு இன்று மரியாதை நிமித்தமாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’அண்ணன் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கில்லியாக செயல்படுகிறது என்றும் அதனால்தான் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். மேலும் பள்ளிகள் திறப்பதற்கு முதலமைச்சருக்கும் கல்வித் துறை அமைச்சருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்