நடிகர் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் இதுதான்!!

திங்கள், 24 ஏப்ரல் 2017 (16:37 IST)
பாகுபலி திரைப்படத்தையடுத்து சுமார் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரபாஸ் கமர்ஷியல் ஆக்ஷன் படத்தில் நடிக்கிறார்.


 
 
இந்த படத்திற்கு 'சாஹோ' என படக்குழுவினர் தலைப்பிட்டுள்ளனர்.  இப்படத்தின் படிப்பிடிப்புகள் பாதி நிறைவடைந்துள்ள நிலையில், பாகுபலி 2 படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பிரபாஸ் இருப்பதனால் படப்பிடிப்புக்கு இடைவெளி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த புதிய படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இது பிரபாஸின் 19 வது திரைப்படமாகும். 
 
இந்நிலையில், வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி 'சாஹோ' படத்தின் டீசர் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்