பவன் கல்யாண் பேச்சுக்கு நடிகர் நாசர் பதிலளித்துள்ளார். இவர் கூறியதாவது:
தமிழ் சினிமாவில் பிற மொழி கலைஞர்களை பயன்படுத்தப்போவதில்லை என்ற கருத்து தவறானதாகும். தற்போதைய சூழலில் பான் இந்தியா படங்கள் நல்லவரவேற்பை பெற்று வருவதால், அனைத்து மொழிப் படங்களிலும் பிற மொழி கலைஞர்களை பயன்படுத்தி வருகின்றனர். அதனால், தமிழ் சினிமா பிற மொழிக் கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் திறமையை எப்போதும் மதிக்கிறது என்று கூறியுள்ளார்.