எளிமையாக வாழ்த்த அவர்,தன் பதவி காலத்திலும் சரி, அவர் பதவியில் இருந்து விலகிய பின்னும் தன் வாழ்க்கையை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென்று வாழ்ந்தவர் ஆவார். லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களுக்கு உற்சாகமூட்டி தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய சாதனையாளர்.
அப்துல்கலாம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி காலமானார்.
இவரது 8ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில், வான் அறிவியலிலும் வாழ்வியல் நெறிகளிலும் சிறந்து விளங்கிய மாமனிதர், ஒரு பொன்னுலகைக் கனவு கண்டு அதை மாணவ சமுதாயத்திடம் விதைத்துப் போனவர், சூழியலும் நாட்டின் சூழ்நிலைகளும் மேம்பட தன் சிந்தனை மொத்தமும் செலவிட்டவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள். அந்தப் பெருமனிதரை இந்நாளில் நினைவு கூர்வோம் என்றூ தெரிவித்துள்ளார்.