அதையடுத்து அந்த படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி, நடிகர் பொன்வண்ணன், பாடலாசிரியர் சினேகன், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் இயக்குனர் ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனால் ஞானவேல் ராஜா சமூகவலைதளங்களில் கடுமையாக எதிர்மறை விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் இப்போது அந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்த நடிகர் கஞ்சா கருப்பு அமீருக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர் அளித்துள்ள நேர்காணலில் “பருத்திவீரன் இல்லன்னா இன்னைக்கு கார்த்தி இல்ல… கார்த்திக்கு இன்னைக்கு சம்பளம் 50 கோடி. அதுக்கு யாரு காரணம் அமீர் அண்ணன்தானே.. சிவக்குமார் ஐயா ஞானவேல் ராஜாவ கூப்டு நீ பேசுறது தப்புன்னு சொல்லணும். அமீருக்கு கொடுக்க வேண்டியத கொடுத்து செட்டில் பண்ணுன்னு சொல்லணும். எம் ஜி ஆர், ரஜினி ரெண்டு பேரும் அவங்க குருநாதர்களுக்கு எவ்ளோ மரியாத கொடுத்தாங்க. இப்பவும் எங்க போனாலும் கார்த்தி ஸ்டேஜ்ல பருத்திவீரன் வசனத்ததான பேசி கைதட்டல் வாங்கிறாரு” என ஆவேசமாக பேசியுள்ளார்.