எது செஞ்சாலும் விமர்சனம் வரத்தான் செய்யும்… போஸ் வெங்கட்டுக்கு துணிவு நடிகர் பதில்!

வெள்ளி, 8 டிசம்பர் 2023 (10:05 IST)
சென்னையை பெருமழை தாக்கி பல பகுதிகளும் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் உதவி கேட்டு சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து மீட்புக் குழு அவரையும், அவர் வீட்டின் அருகே இருந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமீர்கானும் மீட்கப்பட்டனர்.

இதையறிந்த நடிகர் அஜித்குமார் விஷ்ணு  விஷால் மற்றும் அமீர்கானை சென்று சந்தித்தார். மேலும் அந்த பகுதியில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற உதவி செய்தார். இதை நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் இதுபற்றி அஜித்திடம் கேள்வி எழுப்பும் விதமாக “வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு.. இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும்.... (உங்களுக்குள் நல்ல இணைப்பு உண்டு).. ஆனால் உங்களை விரும்பும்.. டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை.,,( ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்கலாம்)” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த விமர்சனத்துக்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் ஜான் கொக்கன் ஒரு புகைப்பட பதிவை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் “நாம் எனன் செய்தாலும் அதை பார்க்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கருத்து சொல்லதான் செய்வார்கள்” என்று கூறியுள்ளார்.
 

Hope you get the message Sir @DirectorBose . #liveandletlive #dowhatyoubelieveisright https://t.co/0ZutWrbJTu pic.twitter.com/T8rP9QE1Sa

— John Kokken (@highonkokken) December 7, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்