தமிழ் சினிமாவில் 90 களின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பப்லு, இவர், அஜித்துடன் இணைந்து அவள் வருவாளா, கார்த்தியுடன் பொன்னுமணி உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் ஆவார். பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான வானமே எல்லை திரைப்படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருப்பார்.
சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்தபோது, சின்னத்திரையில், பல தொடர்களிலும், சீரியல்களிலும், நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்தார். இவர் நடித்து வந்த கண்ணான கண்ணே சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.